• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

உ.பியில் லட்டு திருவிழாவில் மேடை சரிந்து 7 பேர் பலி – 50 பேர் படுகாயம்

ByP.Kavitha Kumar

Jan 28, 2025

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற லட்டு திருவிழாவில் மேடை சரிந்து விழுந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர்.

உத்தப்ரபிரதேச மாநிலம், பாக்பாத் மாவட்டம், பராவுத்தில் ஜெயின் சமூகத்தினரின் வழிபாட்டு தலம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் லட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் பத்கர்கள் லட்டுகளை கடவுளுக்கு படைத்து வழிபடுவது வழக்கம்.

இந்த ஆண்டு லட்டு திருவிழா இன்று நடைபெற்றது. இத்திருவிழாவையொட்டி மதவழிபாட்டு தலத்தில் மூழ்கில் கம்புகளால் மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேடையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஏறி வழிபாடு நடத்த முயன்றனர். அப்போது அதிக பாரம் தாங்காமல் மேடை சரிந்து விழுந்தது.

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த துயரச் சம்பவத்தையடுத்து, உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க உள்ளூர் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாக தெரிவித்துக் கொண்டார்.