• Wed. Apr 24th, 2024

சென்னை – கோவை இடையே 6 ரயில்கள் ரத்து!!

ByA.Tamilselvan

Nov 29, 2022

பராமரிப்பு பணி காரணமாக சென்னை – கோவை இடையே 6 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை எழும்பூர்-சேலம் (வண்டி எண்:22153) இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை (புதன்கிழமை) 1, 2ஆம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. சேலம்-எழும்பூர் (22154) இடையே இரவு 9.30 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 1, 2, 3ஆம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-கோவை (12679) இடையே மதியம் 2.30 மணிக்கும், கோவை-எம்.ஜி.ஆர். சென்ட்ரல் (12680) இடையே காலை 6.15 மணிக்கும் இயக்கப்படும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் வருகிற டிசம்பர் 3ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. எம்.ஜி.ஆர். சென்ட்ரல்-கோவை (12675) இடையே காலை 6.10 மணிக்கும், கோவை-எம்.ஜி.ஆர். சென்ட்ரல் (12676) இடையே மதியம் 3.15 மணிக்கும் இயக்கப்படும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் வருகிற டிசம்பர் 3ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. எம்.ஜி.ஆர். சென்டிரல்-கோவை (12243) இடையே காலை 7.10 மணிக்கும், கோவை-எம்.ஜி.ஆர். சென்ட்ரல் (12244) இடையே மதியம் 3.05 மணிக்கும் இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற டிசம்பர் 3ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *