மகாகவி பாரதியார் மற்றும் அவரது மனைவி செல்லம்மாளுக்கு 6 அடி பொன்நிற சிலை – கல்லூரி மாணவிகள் கும்மிக்கொட்டி பாரதியார் புகழ்பாடினர்
மகாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மாள் தென்காசி மாவட்டம், கடையம் பகுதியைச் சேர்ந்தவராவார் என்பதாலும் சுப்பிரமணிய பாரதியார் பல ஆண்டுகள் கடையத்தில் வசித்த போது அவரது கவி பாடும் திறமையை வெளி உலகத்துக்கு எடுத்துச் செல்ல மனைவி செல்லம்மாள் உந்து சக்தியாக இருந்தார்.
இதனால் மகாகவி பாரதியாருக்கும், அவரது மனைவி செல்லம்மாளுக்கும் கடையத்தில் சிலை அமைக்க வேண்டும் என சேவாலயா டிரஸ்ட் சென்னை திருநின்றவூரில் இருந்து செல்லம்மா பாரதிக்கு 6 அடி உயரத்திற்கு பொன் நிறத்தில் சிலை செய்து ரதயாத்திரையாக கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி புறப்பட்டது.மதுரைக்கு வந்து செல்லம்மா பாரதி ரதம் இன்று காலை மதுரை கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு கல்லூரி மாணவ மாணவியர்கள் பாரதியார் இயற்றிய பாடல்களுக்கு கும்மிக்கொட்டி புகழ்பாடினர். அதனை தொடர்ந்து மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் இன்று மாலை பாராட்டு விழா நடக்கிறது.
தொடர்ந்து மகாகவி பாரதியாரின் சிலை, அவரோடு தொடர்பு உடைய எட்டையபுரம், புதுச்சேரி, சென்னை மற்றும் பல இடங்களில் உள்ளன. ஆனால் பாரதியின் மனைவி செல்லம்மாவின் பிறந்த ஊரான கடையத்தில் நினைவுச் சின்னங்கள் எதுவும் இல்லை.இதனால் கடையத்தில் பாரதி நூலகம், அருங்காட்சியகம், ஆய்வு மையம் மற்றும் பாரதி தொடர்பான கருத்தரங்கு, கவியரங்கு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான மையம் ஏற்படுத்தப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தொடர்ந்து அந்த கட்டிடத்தின் நடுவில் செல்லம்மா பாரதி சிலையை நிறுவ திட்டமிட்டு உள்ளதாகவும், பாரதி செல்லம்மா ரதயாத்திரை வருகிற 31 ஆம் தேதி கடை யத்துக்கு செல்லும். அங்கு வருகிற ஜூன் மாதம் 27 ஆம் தேதி பாரதி செல்லம்மா சிலையை திறந்து வைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அனுமதி கேட்டுப்படும்.