நாகர்கோவிலில் டாக்டர் வீட்டில் 47 பவுன் நகை கொள்ளையடித்த வேலைகாரபெண் மற்றும் டிரைவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில் பார்வதிபுரம் சானல்கரையை சேர்ந்தவர் ஆபிரகாம்ஜோயல் ஜேம்ஸ்.இவர் நாகர்கோவில் பால்பண்ணை அருகில் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். இவரது வீட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 23ம்தேதி வீட்டுலாக்கரில் இருந்து முன்பு 47 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இது தொடர்பாக பினிதாஆபிரகாம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி தேடி வந்தனர்.இந்நிலையில் அங்கு சமையல்வேலை பார்த்த பெருவிளை அம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ஜெயசுபா (37) மற்றும் டிரைவராக வேலைபார்த்த பாலவிளை, சர்ச்ரோடு டேவிட் மகன் டிரைவர் இர்வின் (35) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர் – அவர்களிடம் இருந்து 42 சவரன் தங்க நகை 1 வைர நெக்லஸ் மற்றும் வைர கம்மல் ஆகியவை பறிமுதல் செய்தனர்.