சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நேற்று பல்வேறு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அப்போது, 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி வழங்கியதற்காக நன்றி கூறி, புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
அந்த வகையில், முதல்வரை தமிழ்நாடு தலைமை செயலக சங்கம், ஜாக்டோ-ஜியோ, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு தலைமைச் செயலக ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம், தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம், அலுவலக உதவியாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்தனர்.
அகவிலைப்படி உயர்த்தி வழங்கியதற்காக நன்றி தெரிவித்த சங்க நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.