• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்குகள் தள்ளுபடி

ByA.Tamilselvan

Jan 3, 2023

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவல்லிக்கேணி தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து, எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர், இந்த வழக்குகை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீது நடத்தப்பட்ட விசாரணை முடிவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்குகளை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட வேண்டிய முகாந்திரம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.