• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பைரவர் கோயிலில் 39 அடி பைரவர் சிலை பஞ்சாப் யுனிக் புத்தகம் சார்பில் உலக சாதனை விருது

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி, அடுத்துள்ள அவல்பூந்துறை அடுத்த ராட்டை சுற்றிபாளையத்தில் உள்ள பைரவர் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 39 அடி உயரம் உள்ள பைரவர் சிலைக்காக யுனிக் சாதனை புத்தகம் சார்பில் உலக சாதனை விருது வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டை சுற்றிபாளையத்தில் பைரவர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இக்கோயில் கும்பாபிேஷகம் வரும் மார்ச் மாதம் நடக்கிறது. இக்கோயில் தென்னக காசி பைரவர் கருதப்பட்டு கோயிலின் முகப்பு வாசலில் 39 அடி உயரம் உள்ள பைரவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை பஞ்சாப் சாதனை புத்தகம் சார்பில் ஆய்வு செய்து உலக சாதனை விருதுக்கு தேர்வு செய்தனர்.


அதன்படி உலக சாதனை விருது வழங்கும் விழா நேற்று கோயிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு எம்பி., கணேசமூர்த்தி, பஞ்சாப் யுனிக் சாதனை புத்தகம் சார்பில் தென்னக பொறுப்பாளர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு தென்னக காசி பைரவர் திருக்கோயிலுக்கான உலக சாதனை விருதினை பைரவ பீடம் ஸ்ரீ விஜய் ஸ்வாமிஜிக்கு வழங்கினர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் சு.முத்துசாமி பேசும்போது ஈரோடு மாவட்டத்தில் காலபைரவர் சிலை அமைந்துள்ளது சிறப்பு வாழ்ந்தது. அதுவும் உலகிலேயே மிகப்பெரிய சிலையாக அமைந்தது வரலாற்று சிறப்புமிக்க செயல். கும்பாபிேஷகம் நடத்துவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் தற்போதே பக்தர்களும் பொதுமக்களும் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். காலபைரவர் கோயில் கும்பாபிேஷகம் முடிந்தவுடன் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள். மிகப்பெரிய சுற்றுலாத்தளமாக காலபைரவர் கோயில் விளங்கும். பொதுமக்கள் அனைவரும் உலகத்தில் மிகப்பெரிய சிலையாக உள்ள காலபைரவருக்கு ஒத்துழைப்பு கொடுப்பதோடு நாம் அனைவரும் சேர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம் என பேசினார்.
நிகழ்ச்சியில் ஈரோடு மேயர் நாகரத்தினம் சுப்பிரமணி, மொடக்குறிச்சி எம்எல்ஏ., சரஸ்வதி, முன்னாள் எம்எல்ஏ., ஆர்.எம்.பழனிச்சாமி, மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயலாளரும், அவல்பூந்துறை முன்னாள் பேரூராட்சி தலைவருமான சு.குணசேகரன் மற்றும் பல்வேறு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.