• Mon. Apr 21st, 2025

காலியாகும் நாம் தமிழர் கட்சி கூடாரம்… 3 ஆயிரம் பேர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்

ByP.Kavitha Kumar

Jan 24, 2025

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உட்பட மாற்று கட்சியைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இன்று இணைந்தனர்.

நாம் தமிழர் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக வேலூர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். இந்த நிலையில், பெரியார் மீது தொடர்ந்து சர்ச்சையான கருத்துகளை சீமான் பேசிவருவதற்கு கடும் கண்டனம் எழுந்து வருகிறது. அத்துடன் சீமான் வீடு முற்றுகையிடப்பட்டது. மேலும் எல்டிடிஈ தலைவர் பிரபாகரனுடன் சீமான் எடுத்த புகைப்படம் போலியானது என்ற செய்தி தமிழக அரசியல் களத்தை மேலும் பரபரப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.

இந்தநிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உட்பட மாற்று கட்சியை சேர்த்தவர்கள் என மொத்தம் சுமார் 3 ஆயிரம் பேர் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தங்களை திமுகவில் இன்று இணைத்து கொண்டனர்.

கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, மயிலாடுதுறை, நாமக்கல் பகுதி மாவட்ட செயலாளர்கள், தஞ்சை முன்னாள் மாவட்ட செயலாளர், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் என 51 நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உட்பட நாம் தமிழர் கட்சியினர் மற்றும் மாற்று கட்சியினர் என சுமார் 3 ஆயிரம் பேர் தங்களை திமுகவில் இன்று இணைந்தனர். இந்த நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த திமுக தலைவர்களும் உடன் இருந்தனர்.