ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிக்கு 1,194 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 5-ம் தேதி நடைபெற உள்ளது.. தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக புறக்கணித்துவிட்டது. பாஜக, தேமுதிக,தவெக உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலில் போட்டியிடவில்லை,
திமுக, நாம் தமிழர் ஆகிய இரு கட்சிகள் மட்டுமே பிரதான தேர்தல் களத்தில் உள்ளன. மொத்தம் 46 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளன. தேர்தல் தேதி நெருங்குவதால் திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி இருவரும் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
.
இந்த நிலையிணுல் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக செய்து வருகிறது. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு நேற்று தொடங்கியது.
ஈரோடு இடைத்தேர்தலுக்காக மொத்தம் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 20 சதவீதம் கூடுதலாக சேர்த்து முதன்மை அலுவலர்கள், முதல் நிலை அலுவலர்கள், இரண்டாம் நிலை அலுவலர்கள், மூன்றாம் நிலை அலுவலர்கள் தலா
284 பேரும், 1,200 வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகளுக்கு நான்காம் நிலை அலுவலர்கள் 58 பேரும் என மொத்தம் 1,194 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்.
இவர்களுக்கு, ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியரான ராஜகோபால் சுன்கரா, தேர்தல் ஆணைய இணையதளத்தின் மூலம் கணினி சுழற்சி முறையில் இரண்டாம் கட்ட பணி ஒதுக்கீடு செய்தார். மேலும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு வருகிற 27-ம் தேதி ஈரோடு ரங்கம்பாளையம் ஆர்.ஏ.என்.எம். கலை அறிவியல்
கல்லூரியில் நடைபெற உள்ளது.