

உசிலம்பட்டி அருகே வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து எழுமலை பகுதிக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஜோதில்நாயக்கணூர் விலக்கு பகுதியில் எழுமலை காவல்நிலைய காவல் ஆய்வாளர் சுப்பையா தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அவ்வாறு நடத்திய வாகன சோதனையில் சந்தேகப்படும் படி வந்த இருசக்கர வாகனத்தை இடை மறித்து சோதனை நடத்தியதில் பொட்டலங்களில் கஞ்சா கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.
இந்த கஞ்சா கடத்தல் தொடர்பாக எருமார்பட்டியைச் சேர்ந்த குமார், பெருங்காமநல்லூரைச் சேர்ந்த புவனேந்திரன், கோடாங்கி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பிரசாத் என்ற மூவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து சுமார் 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

