

இந்தியாவில் உள்ள 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளன. எனவே இந்த மாநிலங்களில் இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களில் போட்டியிட உள்ள கட்சிகள் தங்களின் வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றது. இந்தத் தேர்தலில், கடலோர மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் பாஜக போட்டியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், வரும் 14ம் தேதி கோவாவில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ளார்.
அதில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை அடுத்த 5 ஆண்டுகளுக்கு உயர்த்த மாட்டோம் என்றும், எல்பிஜி சிலிண்டர் பெறும் பயனாளிகளுக்கு இனிமேல் 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.சிலிண்டர் பயன்படுத்தும் அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
