கொரோனா மூன்றாவது அலையில் கோவைக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சித்திக் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று 1,929 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 1,929 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 77 ஆயிரத்து 237 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 20 ஆயிரத்து 427 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று ஒரேநாளில் 1,886 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25 லட்சத்து 22 ஆயிரத்து 470 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 340 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சித்திக், கொரோனா மூன்றாவது அலையில் கோவைக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
கோவையில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி 48% சதவிதமாக உள்ளதாகவும், சென்னையில் 78% சதவிதமாக உள்ளதாகவும் கூறினார்.