• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

சிறுமி பலாத்காரம் ஆசிரியருக்கு14 ஆண்டுகள் சிறை..,

ByS.Ariyanayagam

Apr 29, 2026

சிறுமியை பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் நத்தம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த மதுரை அப்பன் திருப்பதி மீனாட்சி கார்டன் பகுதியைச் சேர்ந்த நத்தம் அத்திப்பட்டியில் பணி புரியும் அரசு பள்ளி ஆசிரியர் கண்ணன் (வயது 56) என்பவரை சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

இந்த குற்றவாளிக்கு தண்டனை பெற்று தருவதற்காக எஸ்.பி பிரதீப் உத்தரவின் பேரில், சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முருகேஸ்வரி,லாவண்யா நீதிமன்ற தலைமை காவலர் விஜயலட்சுமி ஆகியோர் விரைவாக ஆவணங்களை தாக்கல் செய்தனர்*.

இந்த வழக்கு திண்டுக்கல் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது.இந்த வழக்கினை அரசு வழக்கறிஞர் மைதிலி சிறப்பாக வாதாடினார். இதையடுத்து குற்றவாளிக்கு 14 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ 1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி சத்யா தாரா தீர்ப்பளித்தார்.