• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

பழனி அருகே திடீர் தீயால் நெல் வயல் நாசம்..,

ByS.Ariyanayagam

Apr 29, 2026

பழனி பகுதியில் திடீர் தீ வயல் நெல்லை நாசம் செய்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மழை அளவு மிகவும் குறைந்துவிட்டது. இதனால் அனைத்து ஏரிகளும், கண்மாய்களும் கிணறுகளும் வறண்டு கிடக்கின்றன. இதனால் வயல்வெளிகள் காய்ந்து சருகுகளாக உள்ளன. இயற்கை மலையும் இல்லாததால் எப்போது தீப்பற்றி எரியும் என்ற நிலை அதிகரித்துள்ளது.

பழநி ஆயக்குடி கொய்யா வாரி பகுதியில் தனியார் காய்ந்த வயலில் வைக்கப்பட்ட தீ அறுவடைக்கு தயாராக இருந்த பக்கத்து நெல் வயலில் பற்றியது. இதனால் இரண்டு ஏக்கரில் நெல் வயல் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதனால் அந்த பகுதி புகை மண்டலமாக மாறியது. தகவல் இருந்த தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் தீ முற்றிலும் எரிந்து முடிந்தது. இந்த சம்பவம் குறித்து ஆயக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.