
உத்தரகாண்ட்டில் உள்ள உத்தர்காசி மாவட்டத்தில்பேருந்து கவிழ்ந்த விபத்தில் 26 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட்டில் உள்ள உத்தர் காசி மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 26 பேர் பலியாகினர். இந்த பேருந்து 20 பேர் மட்டுமே பயணிக்கூடிய சிறிய வகை பேருந்து . இந்த பேருந்தில் அளவுக்கு அதிகமாக 28 பேரை அந்த பேருந்து ஏற்றச்சென்றதே விபத்துக்க காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.விபத்து குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் உத்தரவிட்டுள்ளார். உயிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.