
நிலநடுக்கத்தில் சிக்கயவர்களை மீட்க எலிகளை பயன்படுத்த ஆய்வு நடைபெற்று வருகின்றன.
இந்தோனேசியா ,ஜப்பான் போன்ற சில நாடுகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. நிலநடுக்கத்தில் சிக்கயவர்களை மீட்பது பெரும் சவாலான பணியாகும்.நிலநடுக்கத்தால் தரைமட்டமான கட்டிடத்தின் இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை மீட்க இயலாமல் பலியாகும் சம்பவம் பெரும் துயரமானதாகும். இதனை தவிர்க்க பல தொழில்நுட்பங்கள் பயன்படுத்தபட்டுவருகின்றன. மேலும் மிகசிறிய இடைவெளிகளில் கூட செல்லும் எலிகளை இந்தபணிக்கு பயன்படுத்தலாமா என ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன.
இந்த சோதனையின் போது எலிகள் கட்டட இடிபாடுகளுக்குள் ஒரு சிறிய அளவிலான முதுகு பையுடன்அனுப்படுகிறது. இந்த முதுகு பையில் மைக் மற்றும் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.இதன்மூலம் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களுடன் நம்மால் பேசமுடியும். அந்த வகையில் தற்போது 170எலிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளுக்கு அனுப்பட உள்ளது.