


தமிழகம் உள்பட 22 மாநிலங்களுக்கு மத்திய அரசு இந்த ஆண்டுக்கான பேரிடர் நிவாரண நிதித்தொகை ரூபாய் 7,532 கோடியை விடுவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்தியஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தற்போது நாடு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், கடந்த நிதியாண்டில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட தொகையின் பயன்பாட்டுச் சான்றிதழுக்கு காத்திருக்காமல், வழிகாட்டுதல்கள் தளர்த்தப்பட்டு, மாநிலங்களுக்கு உடனடி உதவியாகத் தொகை வெளியிடப்பட்டுள்ளது. நிதி ஆயோக் பரிந்துரையின்படி ஆண்டு மத்திய பங்களிப்பு இரண்டு சம தவணைகளில் வெளியிடப்படுகிறது. வழிகாட்டுதல்களின்படி, முந்தைய தவணையில் விடுவிக்கப்பட்ட தொகையின் பயன்பாட்டுச் சான்றிதழைப் பெற்று, மாநில பேரிடர் நிவாரண நிதியால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில அரசிடமிருந்து அறிக்கை பெறப்பட்டதன் மூலம் நிதி விடுவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இம்முறை நிதியை விடுவிக்கும் போது, அவசரம் கருதி இந்த தேவைகள் தள்ளுபடி செய்யப்பட்டன.
மழை, வெள்ளம், பூகம்பம், நிலச்சரிவு போன்ற பேரிடர்களால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிட்டு அதற்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத் தின் பரிந்துரையின்படி இந்த தொகை வெளியிடப்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய இரு மாநிலங்களுக்கு முறையே ரூ.180 கோடி மற்றும் ரூ.413 கோடி வழங்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவுக்கு ரூ.1,420 கோடியும், உத்தரபிரதேசத்துக்கு ரூ.812 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.707 கோடியும், பீகாரில் ரூ.624 கோடியும், குஜராத்தில் ரூ.584 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி ரூபாயை அளித்தது மத்திய அரசு. அதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவுக்கு ரூ.1,420 கோடி ஒதுக்கப்பட்டது.
மாநில வாரியாக நிதி ஒதுக்கீடுகள் விவரம்:

• தமிழ்நாடு -ரூ.450
• தெலுங்கானா – ரூ.188.80
• ஆந்திரப் பிரதேசம் – ரூ.493.60 கோடி
• அருணாச்சல பிரதேசம் – ரூ.110.40
• அசாம் – ரூ.340.40
• பீகார் – ரூ.624.40
• சத்தீஸ்கர் – ரூ.181.60
• கோவா – ரூ.4.80
• குஜராத் – ரூ.584
• ஹரியானா – ரூ.216.80
• இமாச்சல பிரதேசம் – ரூ.180.40
• கர்நாடகா – ரூ.348.80
• கேரளா – ரூ.138.80
• மகாராஷ்டிரா – ரூ.1420.80
• மணிப்பூர் – ரூ.18.80
• மேகாலயா – ரூ.27.20
• மிசோரம் – ரூ.20.80
• ஒடிசா – ரூ.707.60
• பஞ்சாப் – ரூ.218.40
• திரிபுரா – ரூ.30.40
• உத்தரப்பிரதேசம் – ரூ.812
• உத்தரகாண்ட் – ரூ.413.20
இந்த நிதி பேரிடர்காலத்தில் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க பெரிதும் உதவும். அதேபோல் பேரிடர் காலத்தை எதிர்கொள்ள உதவிக்கரமாக இருக்கும் என கூறப்படுகிறது.

