• Thu. May 2nd, 2024

நாட்டுக்கு உழைத்த தலைவர்களை பின்னுக்கு  தள்ளி விட்டார் ஸ்டாலின்.., ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு..!

நாட்டுக்கு உழைத்த தலைவர்களுக்கு மணி மண்டபம், சிலைகளை அமைத்து மங்கா புகழை உருவாக்கி வரவாற்று சாதனை படைத்தவர் தான் எடப்பாடிபழனிசாமி. தன் தந்தையாருக்கு புகழ் பாடுவதில் நாட்டுக்கு உழைத்த தலைவர்களை பின்னுக்கு  தள்ளி உள்ளார் ஸ்டாலின். மக்களுக்காகத்தான் திட்டங்கள் இருக்க வேண்டும், திட்டங்களுக்காக மக்கள் என்ற நிலை இருக்கக்கூடாது என்று ஸ்டாலினைப் பற்றி ஆர்.பி.உதயகுமார் செய்தியை வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் இது பற்றி செய்தி குறிப்பில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் கூறி இருப்பதாவது

முதலமைச்சர் கொடுத்திருக்கின்ற அறிக்கையிலே தன்னுடைய தந்தையாரின் புகழை பாட வேண்டும் என்ற அடிப்படையிலும், எடப்பாடியாரின் புகழ் நாடு முழுவதும் உள்ளது  தன்னால் செல்வாக்கு பெறமுடியவில்லை என்ற வேதனையின் உச்சமாக வெளிப்படுத்தி இருக்கிறார்

புரட்சிதலைவரின் நூற்றாண்டை கூட மறந்து போய் ஓராண்டு கழித்து திடீரென நினைவுக்கு வந்து பெயரளவுக்கு சில நிகழ்ச்சிகளை நடத்தியதாக  கூறியது திமுகவின் இயலாமையை காட்டி, ஒரு முழு பூசணிக்காயை சோற்றில்மறைக்கும்  வகையில் ஸ்டாலின் கருத்தின் வெளிப்பாடாக உள்ளது. 

எடப்பாடியார் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் மதுரையில் முதன் முதலில் இளைஞர் பெருவிழா மாநாட்டினை நடத்தி, அதில் அம்மாவின் கனவான புரட்சித்தலைவர் நூற்றாண்டு விழாவை கொண்டாடப்படும் இதை மதுரையில் தொடங்கப்படும் என்று அறிவித்து அரசாணை வெளியிட்டார்.

 அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள 32 வருவாய் மாவட்டங்களில் எடப்பாடியார் நேரடியாக சென்று  நூற்றாண்டு விழாவை கொண்டாடினார். மேலும் சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்திற்கு புரட்சித்தலைவர் பெயரை சூட்ட  மத்திய அரசிடம் போராடி பெற்று கொடுத்தார். அதனை தொடர்ந்து மதுரை, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் கட்டிடங்களை புரட்சித்தலைவர் நூற்றாண்டு விழா கட்டிடங்களாக உருவாக்கி கொடுத்தார்.மதுரையில் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் பேரில் இரண்டு மேம்பாலங்களுக்கு பெயர் சூட்டினார்,சென்னையில் மூன்று மெட்ரோ ரயில் நிலைங்களுக்கு பேறிஞர்அண்ணா, புரட்சித் தலைவர், அம்மா ஆகியோர் பெயரை சூட்டினார். தொடர்ந்து மறைந்த தலைவர்களின் புகழை மங்கா புகழாக நிற்க எடப்பாடியார் சாதனை படைத்தார்.

 அது மட்டுமல்ல புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அண்ணாவின் நூல்களை நாட்டுடமையாக்கி அதன் மூலம் 75 லட்ச ரூபாயை அவரின் துணைவியாருக்கு வழங்கினார். அண்ணா இரண்டாவது உலகத் தமிழ் நாட்டை மாநாட்டை சென்னையில் நடத்தினார், ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை புரட்சி தலைவர் மதுரையில் நடத்தினார், எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டை அம்மா தஞ்சையில் நடத்தினார்.

இன்றைக்கு ஸ்டாலின் தந்தையார் பெயரில் கோட்டம், நூலகம், விளையாட்டு மைதானம், கடலில் பேனா சிலை என தந்தையார் புகழ் பாடுவதை மக்கள் முகம் சுளித்து வருகின்றனர். 

ஆனால் ஸ்டாலின் அண்ணாவின் பெயரை கட்சி, கொடி ஆகியவற்றை ஒட்டும் லேபிளாக உள்ளது என்று அதிமுகவை பற்றி விமர்சித்துள்ளது வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது.

திமுகவின் குடும்ப பிடியிலிருந்து மக்களை காப்பாற்ற 17.10.1971 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் இந்த இயக்கத்தை தோற்றினார். அண்ணாவின் கொள்கை மறைக்கப்பட்டுள்ளது, அண்ணாவின் கொள்கை குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது மீண்டும் அண்ணாவின் பெயரை நிலை நிறுத்த தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து அதனைத் தொடர்ந்து அண்ணாவின் பெயரில் ஆட்சியை அமைத்தார் புரட்சித்தலைவர் இருக்கும் வரை திமுக கோட்டை பக்கம் வர முடியவில்லை இது எல்லாம் ஸ்டாலினுக்கு தெரியுமா?

பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவுடைய புகழை இன்றைக்கு எடுத்துச் சென்று மக்களுடைய இதயங்களில்  எடப்பாடியார் பதிவு செய்துவைத்துள்ளார். உலகத்தில் முத்திரை பதித்த இயக்கமாக 51 ஆண்டுகள் பொன்விழா காண்கிற மாபெரும் மக்கள் இயக்கமாக உலகத்திலேயே ஏழாவது பெரிய கட்சியாகவும், இந்திய அளவிலே மூன்றாவது பெரிய கட்சியாகவும், தமிழ்நாட்டிலேயே முதல் பெரிய கட்சியாக உருவாக்கி எடப்பாடியார் எடுத்து வைத்த அந்த தியாக வரலாற்றை நீங்கள் தமிழ்நாட்டு மக்களிடத்தில் இருந்து பிரித்து விட முடியாது.

 குதிரைக்கு கடிவாளம் கட்டியது போல தன் தந்தையாரின் புகழை நிலை நிறுத்துவதை தவிர,  குடும்ப புகழை நிலை நிறுத்துவதை தவிர, குடும்பத்தினுடைய செல்வாக்கை வளர்த்துக் கொள்வதை தவிர, நீங்கள் மூத்த தலைவர்களை ,தமிழ் மொழிக்காக உழைத்துத் தலைவர்களை ,தமிழ் இனத்திற்காக பாடுபட்ட தலைவர்களை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்த தியாகம் புரிந்த தலைவர்களை நீங்கள் கௌரவித்தது உண்டா அதற்கு முயற்சி எடுத்தது உண்டா? 

 எங்கே பார்த்தாலும் கருணாநிதி பெயர்தான் இருக்கிறது ஆனால் நீங்கள் நாட்டுக்கு உழைத்த தலைவர்களுக்கு மரியாதை செய்யவில்லை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? நீங்கள் இன்றைக்கு உங்கள் தந்தையார் பெயரை நீங்கள் சர்வாதிகாரப் போக்குடன் அவருடைய புகழை நிலை நிறுத்த வேண்டும் என்ற காரணத்தினால் பல உழைத்த தலைவர்களை, தியாகத் தலைவர்களை, நாட்டினுடைய வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்த தலைவர்களை பின்னுக்கு சென்று விட்டு, அவருடைய புகழை உழைப்பையும் வரலாற்றின் குழி தோண்டி புதைத்து விட்டு, ஏதோ இந்த நாட்டுக்கு நாட்டினுடைய முன்னேற்றத்திற்கு உங்கள் தந்தையார் மட்டுமே உழைத்தார் என்று இனி வருகிற தலைமுறைக்கு தவறான வரலாற்றை காட்ட முயற்சியை எடுத்து  கொண்டிருக்கிறீர்கள். 

  மக்களுக்காக தான் திட்டங்கள் இருக்க வேண்டும் தவிர, திட்டங்களுக்காக மக்களை நாம் கஷ்டப்படுத்தக் கூடாது அவர்களை கட்டாயப்படுத்த கூடாது கருணாநிதியின் பெயருக்காக அமைக்கப்பட்ட நூலகமா  அல்லது மாணவர் சமுதாயத்திற்கான நூலகமா இது அமையுமா என்பது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது 

எதிலும் கலைஞர் மயம் இதனால் தமிழகமே கலைஞர் மயமாய் விடுமா என்று அச்சமாக மக்கள் உள்ளனர். தமிழ்நாடு கலைஞர் நாடாக உருவாகிடுமா என்று அச்சத்துடன் உள்ளனர் .

தமிழ் மொழி, தமிழ் இனம் ,நாட்டுக்கு அர்ப்பணித்த தலைவருக்கு அதிகமான அளவில் மணிமண்டபம், திருஉருவசிலையை அமைத்து மங்கா புகழாக எடப்பாடியார் உருவாக்கிக் காட்டினார் வேண்டுமென்றால் அரசாணை எடுத்து படித்து பாருங்கள் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *