• Sat. Apr 20th, 2024

நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள்

ByA.Tamilselvan

Aug 27, 2022

பல்கலைக்கழகம் என்ற பெயரில் பட்டம் வழங்கிய 21 போலி நிறுவனங்களின் பெயர் பட்டியலை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது.21 அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள், போலி என்றும், எந்தப் பட்டத்தையும் வழங்குவதற்கு நிறுவனங்களுக்கு உரிமை இல்லை என்றும் தெரிவித்துள்ளது
போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல்
டெல்லி
வர்த்தகப் பல்கலைக்கழகம் லிமிடெட், தரியாகன்ஜ், டெல்லி. (Commercia University)
ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம், டெல்லி.
தொழிற் பல்கலைக்கழகம், டெல்லி.
மாற்றுமுறை தீர்வுக்கான மத்தியச் சட்டப் பல்கலைக்கழகம், (ADR Centric Juridicial University) டெல்லி
இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம், புது டெல்லி. (Indian Institute of science and Engineering- New Delhi)
சுய வேலைவாய்ப்பிற்கான விஸ்வகர்மா திறந்தநிலை பல்கலைக்கழகம், டெல்லி
ஆத்யாத்மிக் விஸ்வவித்யாலயா , டெல்லி
கர்நாடகா
பதகன்வி சர்க்கார் உலகத் திறந்தநிலை பல்கலைக்கழகக் கல்விக்கழகம், பெல்காம்
கேரளா
செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம், கிஷநட்டம்,
மகாராஷ்டிரா
ராஜா அரபிக் பல்கலைக்கழகம், நாக்பூர்
மேற்கு வங்காளம்
இந்திய மாற்றுமுறை மருத்துவ நிறுவனம், கொல்கத்தா
உத்தரப் பிரதேசம்
காந்தி ஹிந்தி வித்யாபீடம், பிரயாக், அலகாபாத், உத்தரப் பிரதேசம்
தேசிய எலக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி பல்கலைக்கழகம், கான்பூர், உத்தரப் பிரதேசம்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பல்கலைக்கழகம் (திறந்தநிலை), அச்சல்தல், அலிகர், உத்தரப் பிரதேசம்
பாரதிய சிக்ஷா பரிஷத், பாரத் பவன், பைசாபாத்சாலை, லக்னோ, உத்தரப் பிரதேசம்
ஒடிசா
நபபாரத் சிக்ஷா பரிஷத், ரூர்கேலா
வட ஒரிஸா வேளாண் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ஒடிஸா.
புதுச்சேரி
ஸ்ரீ போதி உயர் கல்வி கல்விக்கழகம்,, புதுச்சேரி
ஆந்திர பிரதேசம்
கிறிஸ்து புதிய ஏற்பாடு நிகர்நிலைப் பல்கலைக்கழகம். குண்டூர், ஆந்திரா
தமிழகத்தில் போலி பல்கலைக்கழகங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *