பயங்கரவாதம் வேரோடு ஒழிக்கப்படும்
ஐ.நா.வில் ருசிரா கம்போஜ் பேச்சு
பயங்கரவாதம் வேரோடு ஒழிக்கப்படும் வரை ஓயமாட்டோம் என்று ஐ.நா.வில் நிரந்தர இந்திய பிரதிநிதி ருசிரா கம்போஜ் பேசியுள்ளார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி ருசிரா கம்போஜ் பேசும்போது, உலக நாடுகள் தீவிர கவனத்தில் கொள்வதற்கு…
பொங்கல் பரிசுத் தொகுப்புடன்
முழு கரும்பு: மக்கள் நீதி மய்யம்
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் முழு கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது.பொங்கல் பரிசுத் தொகுப்புடன் முழு கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு…
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக
கூறி தமிழக மீனவர்கள் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.நாகை மாவட்டம் கோடியக்கரையில் இருந்து நேற்று முன்தினம் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான படகில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச்…
அமித்ஷா இன்று கர்நாடகம் வருகை
கர்நாடக சட்டசபைக்கு சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதையொட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று (வியாழக்கிழமை) கர்நாடகம் வருகிறார். நாளை மண்டியாவில் நடைபெறும் பா.ஜனதா மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல்-மே…
குமரியில் மீன் விலை கிடு கிடுவென உயர்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. மீன்கள் வரத்து குறைந்து துறைமுகங்கள் வெறிச்சோடிய நிலையில் மீன் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. சாளை மீன் கிலோ 230-ரூபாய்க்கும் நண்டு 500-ரூபாய்க்கும், அயலை மீன் 250-ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மீன்விலை…
8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்தவர்கள்
இப்போது வேண்டும் என்கிறார்கள்
எடப்பாடி பழனிசாமி பேச்சு
8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்தவர்கள் இப்போது அதனை வேண்டும் என்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.இதுகுறித்து விழாவில் அவர் பேசியதாவது:- அ.தி.மு.க.வை எவராலும் வீழ்த்த முடியாது. அ.தி.மு.க.வின் ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்தியாவிலேயே தார்சாலைகள் அதிகம் அமைக்கப்பட்ட மாநிலமாக அ.தி.மு.க.…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 87: உள் ஊர் மாஅத்த முள் எயிற்று வாவல்ஓங்கல் அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்,வெல் போர்ச் சோழர் அழிசி அம் பெருங் காட்டுநெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு,அது கழிந்தன்றே தோழி! அவர் நாட்டுப்பனி அரும்பு உடைந்த…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள்அழகும் ஆடம்பரமும் இருந்தா ஆயிரம் பேர் பழகுவாங்கஅன்பு இருந்தா பழகுற பத்து பேரும் உண்மையாக இருப்பாங்க! தன்னை நல்லவராக காட்டிக்கொள்ள அடுத்தவரைகெட்டவராகச் சித்தரிக்கும் எவரும்நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது! நீங்கள் உடைந்து போன அந்த நிமிடங்களே..உங்களை உருவாக்கிய நிமிடங்கள்..!…
குறள் 351:
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்மருளானாம் மாணாப் பிறப்பு. பொருள் (மு.வ): மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.
சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் கிடையாது: ஆஸி., அறிவிப்பு
புதிய வகை கொரோனாவின் தாக்கத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக ஆஸ்திரேலிய பிரதமர் கூறினார்.சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால், உலக நாடுகள் கலக்கமடைந்து வருகிறது. மேலும், சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் கட்டுப்பாடுகள்…