• Wed. Jan 22nd, 2025

குமரியில் மீன் விலை கிடு கிடுவென உயர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. மீன்கள் வரத்து குறைந்து துறைமுகங்கள் வெறிச்சோடிய நிலையில் மீன் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. சாளை மீன் கிலோ 230-ரூபாய்க்கும் நண்டு 500-ரூபாய்க்கும், அயலை மீன் 250-ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மீன்விலை உயர்வு ஒரு பக்கம் இருந்தாலும் மீன்பிரியர்கள் மீன் வாங்க அலைமோதுகின்றனர். இதனால் வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை தந்துள்ளது.