கர்நாடக சட்டசபைக்கு சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதையொட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று (வியாழக்கிழமை) கர்நாடகம் வருகிறார். நாளை மண்டியாவில் நடைபெறும் பா.ஜனதா மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே உள்ளன. தேர்தல் நெருங்கி வருவதால், ஆளும் பா.ஜனதா உள்பட அனைத்துக்கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பா.ஜனதா பலவீனமாக உள்ள மைசூரு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்த அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. எப்படியாவது செயல்பட்டு ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பா.ஜனதா தலைவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் காய் நகர்த்தி வருகிறார்கள்.
இந்நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று (வியாழக்கிழமை) கர்நாடகம் வருகிறார். இரவு 10 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்களூரு வரும் அவர், ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள தாஜ் வெஸ்ட் என்ட் நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். நாளை (வௌ¢ளிக்கிழமை) காலை 10 மணி முதல் 12.15 மணி வரை கட்சியின் முக்கிய நிர்வாகிகளை தனியாக சந்தித்து பேச அவர் திட்டமிட்டு உள்ளார்.
அமித்ஷா இன்று கர்நாடகம் வருகை
