பஞ்சாப்பை அடுத்து மேற்கு வங்கத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம்
மேற்கு வங்க மாநிலத்தின் சர்வதேச எல்லையில் இருந்து 50 கிமீ வரை எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை நீட்டிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக மேற்கு வங்க சட்டமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய எல்லைக்குள் 50 கிலோமீட்டர் வரை…
48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு
கோவையில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் 48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டம் 23(2) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள சின்மயா…
வெள்ளச் சேதம் குறித்தும் அமைச்சரவைக் கூட்டம்
வரும் நவம்பர் 19 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. வருகிற வெள்ளிக்கிழமை நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் இந்தக் கூட்டத்தில் வெள்ளச் சேதம் குறித்தும் நிவாரண நிதி குறித்தும் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
ராஜாக்கண்ணுவின் மனைவிக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கிய சூர்யா
நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் ஜெய்பீம். உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம். பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா துறையினரும், ரசிகர்களும் படத்தைக் கொண்டாடி வந்தாலும், படத்திற்கு எதிராக சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு மாநில மார்க்சிஸ்ட்…
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெரும் – சரவணன்
பாஜகவின் மதுரை மாநகர மாவட்ட தலைவராக டாக்டர் சரவணன் பதவியேற்பு நிகழ்ச்சி மதுரை காளாவாசல் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டாக்டர்…
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரவிசந்திரன் இன்று பரோலில் வெளிவந்தார்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மதுரை மத்திய சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க ரவிசந்திரன் தாயார் முதல்வருக்கு மனு அளித்தார். தொடர்ந்து ரவிச்சந்திரனின் தாயார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கொடுத்த பரிசீலனையின்…
வணிகவரித்துறையினர் பணியிட மாற்றத்தை கண்டித்து அறிக்கை
வணிகவரித்துறையில் பொதுமக்களின் நலன் கருதி எனக்குறிப்பிட்டு 100க்கும் மேற்பட்ட கடைநிலை அலுவலர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை வணிகவரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு வன்மையாக கண்டித்துள்ளது. இதுபற்றி வணிகவரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் லெட்சுமணன், ஜனார்த்தனன்,…
ஸ்ரீ வில்லிபுத்தூரில் நேற்று இரவு நடைபெற்ற கொலையை கண்டித்து சாலை மறியல்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்தவர் சுபாஷ் (29). இவர் வத்திராயிருப்பு- கிருஷ்ணன் கோயில் சாலையில் தனியார் பார் முன்பு நேற்று இரவு வெட்டப்பட்ட நிலையில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் தகவல் அறிந்த…
சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துகள் பரவுகின்றன- ஹர்திக் பாண்டியா
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா துபாயில் இருந்து விமானம் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தியா திரும்பினார். மும்பை விமான நிலையத்தில் இறங்கிய அவரை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ஹர்திக் பாண்டியாவின் கையில் ஒரு கைக்கடிகாரம் கட்டப்பட்டும்,…
தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் கேட்டதாக பரபரப்பு புகார்
செண்பகராமன்புதூர் கண்ணன்புதூரை சேர்ந்த பாசுஆனந்த் மவுரியா என்பவர் கடந்த 10-11-2021 அன்று தனக்கு மாவட்ட தொழில் முனைவோர் மையத்தின் மூலம் கடன் பெற விண்ணப்பிக்க ஒரு நபர் சான்று கேட்டு விண்ணப்பிக்க தோவாளை வட்டாட்சியர் அலுவலகம் சென்றுள்ளதாகவும், அப்போது தோவாளை வட்டாட்சியர்…




