பாஜகவின் மதுரை மாநகர மாவட்ட தலைவராக டாக்டர் சரவணன் பதவியேற்பு நிகழ்ச்சி மதுரை காளாவாசல் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டாக்டர் சரவணன்,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்த கேள்விக்கு
தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் அரசு மழை வெள்ளத்திற்கு பிறகு தைரியமாக முடிவு எடுக்குமா என்பது தெரியவில்லை. அவ்வாறு தேர்தல் நடத்தினால் தேசிய, மாநில தலைவர்கள் முடிவுகளுக்கு ஏற்ப தேர்தலை சந்திப்போம் என்றார்.
எங்கள் தேர்தல் யுக்தியை முன்னதாகவே வெளியில் சொல்வதில்லை, 100 வார்டில் வெற்றியை பெறுவோம்.
மதுரை மாவட்டத்தில் 100 வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் தயார் செய்துவிடுவோம். வருகிற 21-ஆம் தேதி மனுவைப் பெற உள்ளோம், வருகிற தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றார்.
மழை வெள்ள பாதிப்புகளில் திமுக அரசின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது, மதுரையில் கூட்டணியில் இருந்தாலும் அனைத்து வார்டுகளில் வெற்றி பெறுவோம், இல்லை என்றாலும் பெரும்பான்மையாக வெற்றி பெறுவோம் என்றார்.
வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடமிருந்து தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டுமென, பிரதமர் தமிழக முதல்வரிடம் ஏற்கனவே அலைபேசியில் பேசிவிட்டார்.
தமிழக அரசுக்கு என்ன உதவி வேண்டுமோ அதனை மத்திய அரசு செய்வதற்கு தயாராக உள்ளது என கூறியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.