• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மதுரையில் ‘யங் இந்தியன்ஸ்’ சார்பில் தொழில் முனைவோர் உச்சி மாநாடு..,

ByKalamegam Viswanathan

Jul 17, 2026

மதுரையில் யங் இந்தியன்ஸ் (Young Indians), CII மற்றும் ONE Bharat Spirit அமைப்புகள் இணைந்து நடத்தும் “YiFi 2026” தொழில் முனைவோர் உச்சி மாநாடு வரும் ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தமிழகத் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெல்கம் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் 600-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர், தொழில் துறை வல்லுநர்கள், முதலீட்டாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் இளம் தொழில் தொடங்க விரும்புவோர் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாக புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவித்தல், தொழில் தொடங்க விரும்புவோருக்கு வழிகாட்டுதல், முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் தொழில்முனைவோருக்கிடையே வலுவான வணிக வலையமைப்பை ஏற்படுத்துதல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு (AI), ஸ்டார்ட்அப் வளர்ச்சி, டிஜிட்டல் மாற்றம், வணிக விரிவாக்கம், சந்தைப்படுத்தல், நிதி மேலாண்மை, நிலையான வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சிறப்பு அமர்வுகள், கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன.

மேலும், வெற்றி பெற்ற தொழில்முனைவோரின் அனுபவப் பகிர்வுகள், தொழில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் மற்றும் எதிர்கால இந்தியாவின் தொழில் முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்களிப்பை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த மாநாடு மதுரையை தென் தமிழகத்தின் முக்கிய தொழில் மற்றும் ஸ்டார்ட்அப் மையமாக உருவாக்குவதற்கான முக்கிய முயற்சியாக அமைவதுடன், 2047-க்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி இளைஞர்களை முன்னெடுக்க உதவும் என யங் இந்தியாஅமைப்பின் தேசிய தலைவர் அருண் ரத்தோட் மற்றும் துணை தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.