• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு

Byமதி

Nov 17, 2021

கோவையில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் 48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டம் 23(2) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி, பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கொடுத்த பாலியல் தொல்லை தொல்லை காரணமாக கடந்த 11ஆம் தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்ட 3 பெயர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார். இதையடுத்து மாணவியின் செல்போன் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்ததில், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, சின்மயா வித்யாலயா பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், மாணவியின் அடையாளங்களையும், புகைப்படங்களையும் வெளிப்படுத்தியதாக கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் 48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டம் 23(2) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.