நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் ஜெய்பீம். உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம். பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா துறையினரும், ரசிகர்களும் படத்தைக் கொண்டாடி வந்தாலும், படத்திற்கு எதிராக சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன் படத்தயாரிப்பு நிறுவனத்திடம் பார்வதி அம்மாளுக்கு உதவிடுமாறு கோரிக்கை வைத்திருந்தார். அதை ஏற்று கொண்டு தற்போது படக்குழு பார்வதி அம்மாளுக்கு நிதி உதவி அளித்தது.
ராஜாக்கண்ணு கதாப்பத்திரத்தின் நிஜ வாழ்க்கை மனைவி பார்வதி அம்மாளுக்கு நடிகர் சூர்யா மற்றும் 2D படத்தயாரிப்பு நிறுவனமும் இணைந்து 15 லட்ச ரூபாய் வங்கி வைப்பு நிதி அளித்துள்ளது. இதில் சூர்யா சார்பில் ரூ.10 லட்சமும், 2D நிறுவனம் சார்பில் ரூ.5 லட்சமும் அடங்கும்.