திருச்சியிலிருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசியை போலீசார் லாரியுடன் பறிமுதல் செய்தனர்.
திருச்சி லால்குடி அகிலாண்டேஸ்வரி நகரில் இருந்து டாரஸ் லாரியில் 20 டன் ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவதாக கொள்ளிடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உஷாரான போலீசார் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வந்த சந்தேகத்திற்கிடமான லாரியை வழிமறித்து பரிசோதித்த போது அதில் 20 டன் ரேசன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில் அந்த லாரி திருவாரூர் மாவட்டம் உச்சிவாடி பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவருக்கு சொந்தமானது என்பதும், ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.