அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழையின்மையால் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 119 அடியாக அடியாக குறைந்தது.
தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பறை அணை தனது முழு கொள்ளவான 126.28 அடியை எட்டி நிரம்பி வழிந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சிமலை மற்றும் கொடைக்கானல் பகுதிகளான சோத்துப்பறை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு வரும் நீர் வரத்து முற்றிலும் இல்லாமல் போனது.
இதனால் 126.28 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் தற்போது 119.72 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 89.51 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணையிலிருந்து குடிநீருக்காக வினாடிக்கு 3 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து இன்மையால் மேலும் அணையின் நீர்மட்டம் குறையும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.