ஆண்டிபட்டி அருங்காட்சியகத்தில் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய கல் மரம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அரசு அருங்காட்சி யகத்தில் ‘கல்லாகிப் போன மரம்’ இம்மாதம் (ஆகஸ்ட்) மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் கூறியதாவது: ஆண்டிபட்டி அரசு அருங்காட்சியகத்தில் ஒவ்வொரு மாதமும் ஓர் அரிய பொருள் மக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு அதன் அருமை பெருமைகள் பொது மக்கள் அறிந்து கொள்ளும்படி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். இம்மாதம் ‘கல்லா கிய மரம்’ என்ற மர புதை படிமம் குறிப்புகளுடன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. புதை படிமங்கள் என்பவை பழங்காலத்தில் வாழ்ந்த விலங்குகள், தாவரங்களின் எச்சங்களும் இயற்கையாக பூமியில் புதைந்து பாதுகாக்கப்பட்டு இருக்கும் மிக அரிய பொருட்களாகும். புதை படிமங்களை பற்றி தெரிந்து கொள்வதன் மூலம் வரலாற்றிற்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த விலங்குகள் அதன் பரிணாம வளர்ச்சி குறித்து அறிய முடியும். மேலும் ஒரு நாட்டின் பொருளாதார முக்கி யத்துவம் வாய்ந்த கரி மற்றும் பெட்ரோலியம் போன்ற அரிய பொருட்கள் கிடைக்கும் இடங்களையும் கண்ட றிய முடியும். காலங்கள் செல்லச் செல்ல பூமிக்குள் புகையுண்ட மரங்களில் இருந்து கரிம பொருட்கள் சிதைவடைந்து பூமி யின் இயற்பியல் மாற்றங்களினால் நாளடைவில் மரத்தில் உள்ள கரிம பொருட்கள் இறுகி கல் படிமங்களாக மாறு கின்றன. இந்த அரிய பொருள் தேனி மாவட்ட புவியியல் மற்றும் கனிம வளத்துறை மூலம் அருங்காட்சியகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதன் காலம் சுமார் இரண்டு கோடி ஆண்டுகள் இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த கல்மரம் என்ற மர புதை படிமத்தை இம்மாதம் மக்கள் கண்டு களிக்கலாம் என்றார்.