• Wed. Dec 11th, 2024

தமிழகம் திரும்பிய 18 மீனவர்கள்

Byமதி

Nov 27, 2021

இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரில் 18 பேர் தாயகம் திரும்பினர்.

கடந்த அக்டோபர் மாதம் 11ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 23 நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்களை அந்நாட்டு அரசு விடுவித்ததையடுத்து, 18 பேர் விமானம் மூலம் சென்னை வந்தனர். மேலும் 5 பேருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 2 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டது. 3 பேர் மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு தமிழகம் திரும்ப உள்ளனர்.

தமிழகம் திரும்பிய மீனவர்கள் இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட படகுகளையும் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.