தேசப்பிதா காந்தியடிகளின் 153ஆவது பிறந்தநாளையொட்டி டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

நாடு முழுவதும் காந்தியடிகளின் 153ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். இதேபோல, தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தியின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “ஏராளமான மக்களுக்கு வலிமை தரும் காந்தியின் உன்னத கோட்பாடுகள் உலக அளவில் பொருத்தமானவை” எனவும் பதிவிட்டுள்ளார்.