திருமலையில் உள்ள அன்னமயபவனில் பக்தர்களிடம் இருந்து குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேகற்று பேசினார். அவர் பேசியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 23 லட்சத்து 40 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். உண்டியல் வருமானமாக ரூ.139 கோடியே 33 லட்சம் கிடைத்துள்ளது. லட்டு பிரசாதம் ரூ.1 கோடியே 7 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 53 லட்சத்து 41 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. 10 லட்சத்து 97 ஆயிரம் பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர். நேற்று முன்தினம் 74 ஆயிரத்து 497 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 36 ஆயிரத்து 244 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.5 கோடியே 15 லட்சம் கிடைத்தது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.