சென்னை தீவுத்திடலில் இன்று முதல் உணவுத் திருவிழா. இதையடுத்து பொதுமக்கள் ஆர்வத்தில் திளைத்துள்ளனர் .
ஆகஸ்ட் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்கள் இந்த உணவுத் திருவிழா நடைபெறும் என்றும் இதில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 14ஆம் தேதி காலை 7 மணி அளவில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடைபயணம் நடைபெறும் என்றும் இந்த உணவுத் திருவிழாவில் திரைக்கலைஞர்கள் உள்பட பலர் பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில் இந்த உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.