
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் விடுதலைப் போராட்ட தியாகி விஸ்வநாதாஸின் 137வது பிறந்தநாள்விழாவை முன்னிட்டு, மதுரை ஆட்சியர் மற்றும் மருத்துவர் சமுதாய மக்கள் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட விடுதலைப் போராட்ட தியாகி விஸ்வநாதாஸின் திருவுருவசிலைக்கு, மதுரை ஆட்சியர் சங்கீதா மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து, நகராட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் . மேலும் மருத்துவ சமுதாயத்தைச் சார்ந்த தியாகி விஸ்வநாததாஸ்-ன் சிலைக்கு, அச் சமூகத்தைச் சார்ந்த ஏராளமானோர் மரியாதை செலுத்தி மாலை அணிவித்தனர்.
விஸ்வநாததாஸ் தமது நாடகக் கலையில் விடுதலை வேட்கையினை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில், தமது நாடக நடிப்பின் மூலம் வெளிப்படுத்தினார். மருத்துவர் சமுதாயத்தைச் சார்ந்த இவர், விடுதலைக்காக நாடகத் துறை மூலம் போராடி உயிர் நீத்த தியாகியின் நினைவு தினமான இன்று, அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.