

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சிறப்புரையாற்றினார். அதில் தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதிக்குள் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் 14 மதுபான கடைகளை மூட வேண்டும் மூடவில்லை என்றால் நாங்களே மூட ஆயத்தமாவோம் தமிழக முதல்வர் மீதும் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும் வழக்கு தொடர கவர்னரிடம் அனுமதி கடிதம் கொடுத்துள்ளேன். இன்னும் ஓரிரு நாட்களில் அனுமதி கிடைத்துவிடும். எனவே அமைச்சரை மாற்றினால் போதாது டாஸ்மாக்கை மூட வேண்டும்.
கரூர் கூட்டத்தில் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னது தற்போது உள்ள முதலமைச்சர் தான். உங்களுடைய அழுத்தத்தினால் தான். இப்போது நடைபெறுகின்ற நடவடிக்கை எல்லாவற்றையும் மூடி மறைக்காதீர்கள். கவர்னரின் அனுமதி கிடைத்தவுடன் நான் வழக்கு தொடருவேன். கடந்த 22 மாதமாக 5362 பார்களில் இருந்தும் ஒரு பைசா கூட அரசாங்கத்துக்கு பணம் செலுத்தப்படவில்லை சுமார் 100 கோடி ரூபாய் கட்டவில்லை. அனுமதி பெறாத பார்களை மூட வேண்டும் என சொன்னேன் மூடுனீர்கள். அதேபோல் மதுபான கடைகளையும் மூட வேண்டும் தமிழக மக்களின் பணத்தை சுரண்டுகிறார்கள். எனவே அவர்களுக்கு பாடம் புகட்டியாக வேண்டும் என பேசினார்.

கூட்டத்திற்கு மாநிலக் கொள்கை பரப்பு செயலாளர் குணா, மாவட்ட செயலாளர் ராமையா, துணைச்செயலாளர் செல்வராஜ், மாவட்ட விவசாய அணி பால்ராஜ் வர்த்தக அணி செல்வசுந்தர், நகர செயலாளர் சாமித்துரை, துணை செயலாளர் முருகேசன் சுந்தர் துரைப்பாண்டி சேகர் சுரேஷ் முருகன் சுரேஷ் குமார் மாரியப்பன் ராஜா ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
