இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன், இந்திய அறிவியல் மையத்தின் முன்னாள் தலைவர் பலராம் உள்பட 18 பேர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2014.ம் ஆண்டில் இந்திய அறிவியல் நிறுவன வாரிய உறுப்பினராக கோபாலகிருஷ்ணன் இருந்தபோது பொய் குற்றச்சாட்டுகளைக் கூறி தான் பணி நீக்கம் செய்யப்பட்டு, சாதி ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக துர்கப்பா என்பவர் புகார் அளித்திருந்தார்
அவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், “நான் இந்திய அறிவியல் மையத்தின் நீடித்த தொழில்நுட்பப் பிரிவில் பணி புரிந்தேன் கடந்த 2014-ம் ஆண்டு தான் பணியில் இருந்தபோது போலியான பாலியல் வழக்கில் சிக்கவைக்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டேன். அப்போது சாதிய ரீதியிலான அவதூறுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் பேரில் உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன், இந்திய அறிவியல் மையத்தின் முன்னாள் தலைவர் பலராம் உள்பட 18 பேர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.