• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

வாகனங்கள் திடீரென தீ பிடித்து எரிந்தது சதி காரணமா என போலீசார் விசாரணை..,

ByKalamegam Viswanathan

Aug 31, 2026

திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தனக்கன்குளம் சீனிவாசா காலணி பைபாஸ் சாலை அருகே தனியார் ஆட்டோ கன்சல்டிங் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணியளவில் தீ பற்றி எரிந்துள்ளது.

இதனைக்கண்ட அப்பகுதியினர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பரங்குன்றம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் தீயை போராடி அனைத்தனர். இதில் 5 க்கும் மேற்பட்ட டூவிலர்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.

தீப்பற்றி எரிந்த இடத்தில் பெட்ரோல் சிதறி கிடந்ததாக தெரிகிறது. இதனால் யாரேனும் மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.