தேர்ச்சி பெறாத / வருகை புரியாத மாணவர்கள் எழுதிய 11 ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது
கடந்த மே மாதம் நடைபெற்ற மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத / வருகை புரியாத மாணவர்கள், மீண்டும் துணைத் தேர்வை எழுத இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு மாணவர்கள் ஜூன் 29 முதல் ஜூலை 6 வரை விண்ணப்பம் பெறப்பட்டது. அதைத்தொடர்ந்து, தேர்வுகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில்,11ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 11ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இன்று வெளியாகிறது 11ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்!!
