• Thu. Dec 12th, 2024

நீட்தேர்வு முடிவுகள் தாமதம் – என்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு !

ByA.Tamilselvan

Aug 24, 2022

நீட்தேர்வு முடிவுகள் தாமதமாவதால் என்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி தகவல்
பி.இ. படிப்பில் சேருவதற்கான என்ஜினீயரிங் கவுன்சிலிங் நாளை (25-ந்தேதி) தொடங்கி அக்டோபர் 21-ந்தேதி முடிவடையும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வெளி வராததால் என்ஜினீயரிங் கவுன்சிலிங் நாளை 25-ந்தேதி தொடங்குமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- என்ஜினீயரிங் படிப்பு சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு நாளை (வியாழக்கிழமை) முதல் தொடங்குவதாக இருந்தது. ஆனால் இன்னும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. அந்த தேர்வு முடிவுகளை பொறுத்துதான் பி.இ. என்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வை நடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே நாளை நடைபெற இருந்த என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுகிறது. நீட் தேர்வு முடிவு வந்த பிறகு 2 நாட்கள் கழித்து பொது கலந்தாய்வு ஆரம்பிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.