• Sat. May 9th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

ஜூலை 10ஆம் தேதி பொது விடுமுறை!!

ByA.Tamilselvan

Jul 1, 2022

தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை ஜூலை 10ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். எனவே தமிழக அரசு ஜூலை10ம் தேதி பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.
ஈகை திருநாள் எனப்படும் பக்ரீத், இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜில் ஹாஜி பிறை நேற்று தென்பட்டதால் ஜூலை 10ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த பண்டிகைக்கு ஆடுகள் குா்பானி கொடுக்கப்பட்டு இறைச்சியை பகிர்ந்தளிப்பது வழக்கம். அந்நாளில் அனைத்து மதத்தினருக்கும் பிரியாணி வழங்குவதும் இஸ்லாமியா்களின் வழக்கம். இந்நிலையில் ஜூலை 10ஆம் தேதி தமிழக அரசு சார்பாக பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.