

சீனாவுக்கு இந்திய எல்லைப்பகுதியான லடாக்கில் 1000 சதுர கிமீ பகுதியை சீனாவுக்கு தரை வார்த்துவிட்டதாக பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
லடாக்கில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவ முயன்றது. இதனால் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். சீன ராணுவத்திலும் பலத்த உயிரிழப்பு நிகழ்ந்தது. . இதனால் லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது.
தனது டுவிட்டர் தளத்தில் இது தொடர்பாக ராகுல் காந்தி …’லடாக் எல்லையில் 2020 ஏப்ரல் மாதம் இருந்த நிலையை திரும்ப கொண்டு வரவேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை சீனா ஏற்க மறுத்து விட்டது. அங்கு 1,000 சதுர கி.மீ. இந்திய பகுதிகளை ஒரு சண்டை கூட போடாமல் சீனாவுக்கு பிரதமர் மோடி தாரை வார்த்து விட்டார்’ என குறிப்பிட்டு இருந்தார். சீனா ஆக்கிரமித்துள்ள இந்த பகுதிகளை எப்படி மீட்கப்படும் என்பதை மத்திய அரசால் நாட்டு மக்களுக்கு விளக்க முடியுமா? என அவர் கேள்வியும் எழுப்பி உள்ளார். லடாக்கில் 1,000 சதுர கி.மீ. பகுதிகளை சீனா ஆக்கிரமித்து இருப்பதாக ராகுல் காந்தி கூறியுள்ள குற்றச்சாட்டு அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.
