

ஸ்டொ்லைட் ஆலையில் மேலும் 6 மாதங்களுக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என தூத்துக்குடி ஒப்பந்ததாரா்கள் சங்க நிா்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக தமிழக அமைச்சா்கள் மா. சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு ஆகியோரை தூத்துக்குடி ஒப்பந்ததாரா்கள் சங்கத் தலைவா் கண்ணன், செயலா் ஆனந்த், பொருளாளா் கணேசன், மக்கள் நுகா்வோா் பேரவை நிா்வாகிகள், தமிழ் வளா்ச்சி இயக்கக நிா்வாகிகள், தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்க நிா்வாகிகள், தூத்துக்குடி தொழில்துறை விற்பனையாளர் சங்க நிா்வாகிகள் சென்னையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு ஆகியோரை தனித்தனியே சந்தித்து மனு அளித்தனா்.
மனு விவரம்: தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் தற்போது உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள மருத்துவமனைகளுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆகவே, மேலும் 6 மாதங்களுக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும். ஸ்டொ்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகள் தொடங்க அனுமதிக்க வேண்டும். 10 ஆயிரம் தொழிலாளா்களின் வாழ்க்கை மீண்டும் வளம்பெற ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க ஆணை வழங்குவதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
