
மதுரையில் வீடு புகுந்து பணம் மற்றும் லேப்டாப் உள்ளிட்டவை திருட்டு- காவல்துறை விசாரணை.
மதுரை மகபூப்பாளையத்தை சேர்ந்தவர் கோகுல கண்ணன். இவர் கடந்த சில வருடங்களாக அப்பகுதியில் உள்ள குடியிருப்பில் தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் நிலையில், வீட்டின் கீழ் தளத்தில் கணினிகளை வைத்து அலுவலகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று குடும்பத்தினரோடு வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டின் பின்பக்க இரும்பு கேட்டையும், மரக்கதவையும் உடைத்து வீட்டில் புகுந்த மர்மநபர் ஒருவர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 30ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் விலையுயர்ந்த லேப்டாப் மற்றும் கம்யூட்டர் உள்ளிட்டவற்றை திருடிச்சென்றுள்ளார். வீட்டின் கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கோகுல கண்ணன் எஸ்எஸ் காலனி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபரை தேடி வருகின்றனர். மதுரையில் அடுத்தடுத்து நிகழும் திருட்டுச்சம்பவங்களால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.
