மெஞ்ஞானபுரம் அருகே வீடுபுகுந்து 21 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள அச்சம்பாடு கிராமம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மனைவி ராஜேஸ்வரி (36). இவரது வீட்டில் நேற்று இரவு அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது. மர்ம நபர்கள் வீடுபுகுந்து கள்ளச்சாவியால் பீரோவை திறந்து 21 பவுன் நகைகளை திருடிச் சென்றுவிட்டார்களாம். இதுகுறித்து மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.