• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தனது வாக்கை பதிவு செய்த பின் அதிமுக வேட்பாளர் மகேந்திரன் பேட்டி..,

ByP.Thangapandi

Apr 23, 2026

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று நடைபெறுகிறது, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 342 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணிக்கு வாக்கு பதிவு விறுவிறுப்பாக துவங்கியது.,

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை வாக்காக பதிவு செய்து வருகின்றனர்.,

உசிலம்பட்டி டி.இ.எல்.சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள 70 வது வாக்குச்சாவடி மையத்தில் உசிலம்பட்டி அதிமுக வேட்பாளர் மகேந்திரன் தனது வாக்கினை மக்களோடு மக்களாக வரிசையில் நின்று பதிவு செய்தார்.,

ஆட்சி மாற்றம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவது உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், மக்கள் ஆர்வத்துடன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வருவதாக அதிமுக வேட்பாளர் மகேந்திரன் பேட்டியளித்தார்.,