
லெமூரியா வர்மக்களரி அடிமுறை உலகக் கூட்டமைப்பு சார்பில் 25 நாடுகளில் உள்ள கலைஞர்கள் பங்குப்பெற்று தொடர்ந்து 12 மணிநேரம் இணையம் வழியாக காணொளி காட்சி மூலம் நடைப்பெற்ற தற்காப்பு கலை சாதனை வகுப்பு நாகர்கோவிலில் நடைப்பெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இன்று நடைபெற்ற தமிழர்களின் தற்காப்புக் கலையில் சாதனைப்படைக்கும் வகையில் சோழன் உலக சாதனை புத்தகத்தில் ”
இடம் பெறும் விதத்தில் சாதனை படைக்கும் முயற்சியில் பாரம்பரிய தற்காப்பு கலையான வர்மக்கலையில் சர்வதேச அளவில் பயிற்சி பெற்ற மாணவர்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஆயிரம் தற்காப்புக் கலை வீரர்கள் ஒரே நேரத்தில் இருபத்தைந்து நாடுகளிலிருந்து தொடர்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக இணையதளத்தில் நேரலையாக வர்மக்கலைகளை செய்து காட்டியுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை குமரிமாவட்டத்தில் தாய் பயிற்சி கழகமாக இருக்கும் லெமூரியா தற்காப்பு கலை நிறுவனர்
ஆசான்.செல்வன் தலைமையில் (25) நாட்டு தற்காப்பு கலை வீரர்களை ஒன்றிணைத்து இந்த சாதனை படைக்கும் நிகழ்ச்சியானது நடைப்பெற்றுள்ளது.
இதில் ஆசாத்தி,சிசிலி செல்வன் ,லெமூரியா தாய்க்கள இயக்குனர் ஆசான்.மதுரானந்தன், லெமூரியாவின்செயல் இயக்குனர்கள்.மணிவண்ணன் (சிங்கப்பூர்) முரளிதரன் (மலேசியா)
டாக்டர்.சண்முகம் (USA),ராஜா (கத்தார்)
Dr. காமராஜ் (இங்கிலாந்து),கேசவன் (UK),கார்த்திக், தயா, பாரதி, காருண்யா மற்றும் முன்னிலையில் நடைப்பெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் கூறுகையில்”
தமிழரின் பாரம்பரிய வர்மக்கலையான லெமோரிய களரி கலையை ஒலிம்பிக் முதல் சர்வதேச போட்டிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும், அதன் தரத்தை உலகறிய செய்ய வேண்டும் என்ற முயற்சியில் இந்த இளைஞர்கள் எடுத்து உள்ளதை பாராட்டும் விதமாகவும் இதற்காக தான் சட்டசபையில் பேசி உலகறிய இந்த தமிழரின் பாரம்பரிய தற்காப்பு கலையை எடுத்து செல்ல ஊன்றுகோலாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
