• Wed. Feb 19th, 2025

ரவுடியுடன் கைகோர்த்த சாமியார் கைது…

Byadmin

Jul 22, 2021

திருச்சி அருகேயுள்ள அல்லித்துறையைச் சேர்ந்த பாலாசாமிகள் தேஜஸ் சுவாமிகள் என்கிற பாலசுப்ரமணியம் (31). இவர் கரூர் குளித்தலை தாலுகா ஒத்தக்கடையில் தட்சின காளி என்ற காளி கோவிலை கட்டி வழிபாடு நடத்துவதுடன் பக்தர்களுக்கு குறி சொல்லி வருகிறார். சமீபத்தில் அவர் பேசிய ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. காவல் துறை அதிகாரிகளுக்கும் தனக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவம் தமிழகம் முழுவதும் உள்ள 42 ரவுடிகளின் என்கவுண்டர் கிட் லிஸ்டில் உள்ளதாகவும் அதில் 12 பேர் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளார். உங்களுக்கு தெரிந்த ரவுடிகளை பத்திரமாக இருக்குமாறும், எதிர் முனையில் பேசும் ஒரு வழக்கறிஞருக்கு அறிவுரை வழங்குகிறார். தமிழக முதலமைச்சர் வீட்டுக்கு நேரில் சென்று வந்ததாகவும், அமைச்சர்கள் பலரும் என்னிடம் ஜோதிடம் கேட்பதாகவும்பேசிய ஆடியோ வெளியாகி வைரலாகியது. இதனையடுத்து ஜீயபுரம் டி.எஸ்.பி. செந்தில்குமார் சாமியார் பாலசுப்ரமணியிடம் விசாரணை நடத்தி வந்தார்.இந்நிலையில் கொட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த ரவுடி ஜெய் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடி சென்றது தொடர்பான வழக்கு இருந்து வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது சாட்சி சொல் வந்த நபரை ரவுடி ஜெய் மிரட்டினான். அப்படி மிரட்டும் போது தனக்கும் சாமியார் பாலசுப்ரமணியனுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் சாமியார் நினைத்தால் உடனடியாக ஆட்களை வைத்து கொலை செய்ய முடியும் என மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் சாமியார் என்னை என்கவுண்டரில் இருந்து காப்பாற்றியுள்ளதாகவும் ஜெய் கூறியிருக்கிறான். இதனையடுத்து சாமியார் பாலசுப்ரமணியம், ரவுடி ஜெய், மற்றும் வழக்கறிஞர் கார்த்திக் ஆகியோர் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பல்வேறு பல்வேறு பிரிவுகளில் பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்ற காவலில் சிறை வைக்கப்பட்டனர். இது தொடர்பாக திருச்சி காவல் ஆணையாளர் அருண் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுமக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தும் வகையில் போலிச்சாமியார்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.போலி சாமியார்களால் ஏமாற்றப்பட்டவர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்று அருண் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.