


அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைவின் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி வியாழனன்று காலமானார்.

அவரது மறைவை ஒட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.

