கோவை. ஜூலை. 20: கோவை காந்திபுரம் சிக்னல் அருகே திருவள்ளுவர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் மக்கள் இதுவரை சாலை விதிகளை மதிக்காமல் டவுன் பேருந்து நிலையத்தில் பஸ்சில் இருந்து இறங்கிய உடன் உடனடியாக வெளியூருக்கு செல்ல பேருந்துகளை பிடிப்பதற்காக குறுக்கு வழியில் தடுப்பு இரும்பு தகடுகளை விலக்கிவிட்டு ஏறி குதித்து திருவள்ளுவர் பேருந்து நிலையத்திற்க்கு சென்றனர். எதையே சாதித்து போல பஸ்ஸில் ஏறி பயணித்து வந்தனர். அதனால் அந்த ரோட்டில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தன. இந்நிலையில் நேற்று காந்திபுரம் சிக்னலில் இருந்து டவுன் பேருந்து நிலையத்தின் பின்புறம் வரை சிமெண்ட் தளம் உருவாக்கப்பட்டு அதன் மீது கருப்பு வெள்ளை வர்ணம் அடிக்கப்பட்டது. ஆதலால் அந்தப் பகுதியில் மக்கள் ஏறி குதித்து வெளியூருக்கு செல்ல முடியாது. இனி முறைப்படி சாலை விதியை மதித்து தான் செல்ல வேண்டும். ஆதலால் இனி அப்பகுதியில் விபத்துக்கள் குறையும்.